சனாதன தர்மம் குறித்து பேசினால் இதுதான் கதி.. உதயநிதி ஸ்டாலினின் நிலை என்ன?

Update: 2024-06-26 07:48 GMT

கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன தர்மம்’ சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது என்றும், அதை மலேரியா, டெங்கு போன்று ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், சனாதன பேச்சுக்கு எதிராக பரமேஷ் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஆஜராகியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. ஆ.ராசா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


25 ஜூன் 2024 தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான திமுகவின் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பெங்களூரு சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை. இன்றும் ஆஜராகாவிட்டால், பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜராகியுள்ளார். பிறகு உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. 

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை அடுத்து, பெங்களூருவில் உள்ள 42வது மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் இந்த வழக்கை வரும்  ஆகஸ்ட் 8, 2024க்கு ஒத்திவைத்தது.

Input & Image courtesy:The Commune News

Tags:    

Similar News