மக்களவையில் உதயநிதிக்கு பாலபிஷேகம் செய்த திமுக எம்.பிக்கள்! கோபாலபுரத்தின் கொத்தடிமைகள்! அண்ணாமலை சாடல்!
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முன்னதாக கடந்த வருடங்களில் புதிய எம்.பிகள் பலர் தங்கள் தாயகத்தை போற்றியும், இஷ்ட தெய்வத்தை வழிபட்டும் பதவி பிரமாணத்தை மேற்கொண்டார்கள். ஆனால் தற்பொழுது தமிழகத்தைச் சேர்ந்த 24 தி.மு.க எம்.பிகள் மற்ற எம்.பிகளை விட ஒரு புதிய பெயரை முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்துள்ளனர்.
அதாவது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் பதவி பிரமாணம் மேற்கொள்ளும் பொழுது "எங்கள் எதிர்கால உதயநிதி ஸ்டாலின் வாழ்க" என்று குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து சென்னை எம்.பி தயாநிதிமாறன் "தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க" எனவும், காஞ்சிபுரம் எம்.பி செல்வம் 'பெரியார் அண்ணா, கலைஞர், தலைவர் தளபதி வாழ்க! இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க' எனவும், அரக்கோணம் எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் 'தமிழ் வாழ்க, தலைவர் கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க" எனவும், சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணி வேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோரும் "கலைஞர் வாழ்க, எங்கள் முதல்வர் வாழ்க, நமது வருங்கால உதயநிதி வாழ்க" என்று உதயநிதியை குறிப்பிட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் தஞ்சாவூர் எம்.பி முரசொலி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வர சாமி, ஈரோடு எம்.பி கே.இ.பிரகாஷ், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோர் "தமிழ் வாழ்க, திமுக வெற்றி பெறட்டும், தளபதி வாழ்க, எங்கள் வருங்காலம் உதயநிதி" என்று பதவி ஏற்றனர்.
இப்படி திமுக எம்.பிக்கள் பெரும்பாலானோர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறகு அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் என்று குடும்ப அரசியலை குறிப்பிடும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்தி பதவி ஏற்றினர். ஆனால் தர்மபுரி திமுக எம்.பி ஏ.மணி, வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், நாமக்கல் எம்.பி ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய எம்.பிகள் பதவிப்பிரமாணம் மட்டுமே மேற்கொண்டனர். மற்றபடி வேறு எந்த வார்த்தைகளையும், வசனங்களையும் அவர்கள் கூறாததும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.