தேர்தல் முடிந்ததும் மீண்டும் வேலையை காண்பித்த இண்டி கூட்டணி! விஸ்வரூபம் எடுத்த சமாஜ்வாதி எம்.பி கடிதம்!
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஆர்.கே.சௌவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். எம்.பி ஆர்.கே.சௌவுத்ரி எழுதிய கடிதத்தில், மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்றி மக்களின் பார்வைக்கு தென்படும்படி அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில் அரசர் அல்லது இளவரசியின் மாளிகை அல்ல! முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோலை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், I.N.D.I.A நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிரான அவர்களின் கூச்சல்களுடன் கூட்டணி மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. இதுதான் I.N.D.I.A 'யின் கூட்டு நிலைப்பாடா? ஆனால் நாங்கள் I.N.D.I.A கூட்டணி மற்றும் திமுகவின் கருத்துகளை எதிர்க்கிறோம்.
பண்டிட் நேருவால் விரட்டியடிக்கப்பட்டு இன்று நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மீண்டும் அதன் சரியான இடத்திற்கு செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் செங்கோல் ஒரு நீதியின் சின்னம் என்பதை அறியாத சமாஜ்வாதி எம்.பி 'க்கு கற்பிக்க விரும்புகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையிலும், ஆசீர்வாதத்தாலும் நாடாளுமன்றத்தில் செங்கோல் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், 'செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது' 'செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்' எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை. இது தமிழ் மண்ணின் நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரதப் பிரதமர் அதை நிறுவினார்.
கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும், புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. சமாஜ்வாதி காட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம், ஆனால் நம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்க்கலாமா?திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் இன்று கிழித்தெரியப்பட்டிருக்கிறது. தமிழும், தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காக தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல! என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சமாஜ்வாதி எம்.பி 'யின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Source : The Commune