பாரத தேசத்தை அலங்கரிக்கும் தமிழர்கள் வழங்கிய செங்கோலை அவமதிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்!
மூன்றாம் முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு கூடிய நாடாளுமன்ற அவையின் தொடக்க நாளிலிருந்து செங்கோல் குறித்த சர்ச்சை பேச்சுக்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று செங்கோலை கிண்டல் செய்து மீண்டும் சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார் மதுரை எம்.பியும், சி.பி.ஐ.எம் மாநில செயலாளருமான சு.வெங்கடேசன்.
18 வது லோக்சபாவில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது சி.பி.ஐ.எம் எம்.பி வெங்கடேசன் பேசும்பொழுது, "மன்னராட்சி ஒழிந்த போது செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டது. இந்த செங்கோலை கையில் வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்தில் எத்தனை நூறு பெண்களை அடிமையாக வைத்திருந்தான் தெரியுமா? இந்த செங்கோலை கொண்டு வந்து லோக்சபாவில் வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தான் வெற்றி பெற்று எம்.பியாக பொறுப்பேற்றுள்ள மதுரை மாநகரின் வரலாற்றையும் மறந்து பேசியுள்ளார்.
இதற்கு, கடுமையான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள் எழுந்து வருகிற நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் பொழுது, தனது மொபைல் போனில் ஒரு புகைப்படத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் காட்டினார். அதில், மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செங்கோலை கையில் பிடித்தவாறு பெண் மேயரிடம் கொடுக்கும்படி நின்றுள்ளனர். இதை பார்ப்பதற்கு செங்கோல் மாதிரி இருக்கிறதா அல்லது குச்சி மாறி இருக்கிறதா? இன்று இதே எம்.பி பாராளுமன்றத்தில் வீர வசனம் பேசி இருக்கிறார். செங்கோல் என்றால் பெண்களை அந்தப்புரத்தில் அடிமைப்படுத்துவது என்று, ஆகவே இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பெண் மேயரின் கையில் வெங்கடேசன் அவர்கள் ஒரு செங்கோலை கொடுத்திருக்கிறார் அப்போ இவரை அடிமைப்படுத்துவதாக அர்த்தமாகுமா?
தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் நிலமை இடத்திற்கு ஏற்றபடி மாறிக்கொண்டு பேசும்படி ஆகிவிட்டது. அந்த வகையில் சு.வெங்கடேசன் அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோல் குறித்து ஒரு புது விரிவுரை கொடுத்திருக்கிறார். ஆனால் நீங்கள் செங்கோல் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், அதில் ஒரு திமுக மேயர் இடம் பெற்றுள்ளார். அன்று உங்களுக்கு அது தப்பாக தெரியவில்லை! ஆனால் பாராளுமன்றத்தில் நரேந்திர மோடி அவர்கள் செங்கோலை நிறுவினால் அது தவறா? இதன் மூலமே தெரிகிறது இதுதான் திமுவினரின் அரசியல் போலி முகத்திரை!
செங்கோல் குறித்து திருவள்ளுவர் அவர்கள் 10 திருக்குறளை எழுதியிருக்கிறார் அதை தவறு என்று கூறலாமா? தனிப்பட்ட முறையில் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய புத்தகங்களால் ஈர்க்கப்பட்டவன் நான், ஆனால் தற்போது அரசியல் ரீதியாக ஆளுங்கட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தற்போது பேசக்கூடிய இவரின் கருத்து கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை என்று அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.