தவறை மறைக்க இழப்பீடு அறிவித்த திமுக! உயர்நீதிமன்றம் வைத்த செக்!

Update: 2024-07-05 17:15 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி அறுபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததும், அவர்களது நிலைமையும் மோசமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்ததற்கும், திமுக அரசிற்கும் தொடர்பு உள்ளது என்றும் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதே காவல் நிலையத்திற்கு அருகில் தான், அதனால் காவல் அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி இந்த சம்பவம் நடந்திருக்க முடியும் என்று மக்களும், எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். 

அந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் இழப்பீடாக அறிவித்து வழங்கினார். இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் விதிக்கப்பட்டது. ஏனென்றால் இயற்கை பேரிடர்கள் பல வந்த பொழுது அறிவிக்காத இந்த இழப்பீட்டுத் தொகையை கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏன் வழங்க வேண்டும். நேர்மையாக வரி கட்டியவர்களின் பணத்தில் இருந்து தான் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு வழங்க வேண்டுமா! இதன் மூலம் கள்ளச்சாராய இறப்புகளை மேலும் ஊக்குவிக்கிறீர்களா? என்று சமூக ஆர்வலர்கள் தரப்பிலும், மக்கள் தரப்பிலும் திமுக அரசுக்கு எதிராக கேள்விகள் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இதுகுறித்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. அதாவது தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு அதிகமான தொகை அறிவித்திருப்பது, அதற்கான காரணம் என்ன என்பதை எழுப்பி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஏன் 10 லட்சம் வழங்க உள்ளீர்கள், இது அவர்களை ஊக்கப்படுத்த தானே செய்யும்! இழப்பீடு வழங்கலாம், ஆனால் இயற்கை பேரிடர் போன்ற விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு கூட இது போன்ற இழப்பீடுகள் வழங்கப்படவில்லையே? என திமுக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டு தொகை குறித்த கேள்வியை முன் வைத்துள்ளது.

Source  : The Commune 


Tags:    

Similar News