தி.மு.க ஆட்சியில் ஆறாக ஓடும் கள்ளச்சாராயம்.. திராவிட மாடலை சாடிய அண்ணாமலை..

Update: 2024-07-07 09:44 GMT

"தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட யாருக்கும் தைரியம் இல்லை. அதையும் மீறி கேட்டால் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக்கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். நேற்று சென்னை வானகரத்தில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.


தமிழக பா.ஜ.க மீது ஏவப்படும் அடக்குமுறை:

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "தமிழகத்தில் பா.ஜ.க மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கிறது. பா.ஜ.க வினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது. மாநிலத்தில் எந்த கட்சியினர் மீதும் இல்லாத அடக்குமுறை பா.ஜ.க மீது ஏவப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் கட்சி தலைவர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். தி.மு.க ஆட்சியில் சாமானிய மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மாநிலத்தில் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. இது குறித்து பேசவும், உண்மையை சொல்லவும், எதிர்க்கவும் யாருக்கும் தைரியம் இல்லை. மீறி எதிர்த்தால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் திருவெண்ணெய்நல்லூரில் ஒருவர் கள்ளச் சாராயத்துக்கு பலியானார். அதற்கு முன்பு திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டையில் 5 பேர் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறுவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்பாக, கள்ளக்குறிச்சியல் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் முழுவதுமாக தங்களுடைய கண் பார்வையை இழந்துள்ளனர்.


சாமானியர்களின் குரலாக இருக்கும் பா.ஜ.க:

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. அப்படியே கேட்டாலும் அவர்கள் காவல்துறையினரால் அடக்கப்படுகிறார்கள். பாஜக தற்போது அவர்களின் குரலாக இருக்கிறது. சாமானியர்களின் குரலை திமுக அரசு நசுக்கிக் கொண்டிருக்கும்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீய சக்தியின் ஆட்சி தூக்கி எறியப்படும் வரை, பாஜகவின் குரல் ஒரு சாமானிய மனிதனின் குரலாக ஒலிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்

Input & Image courtesy: News

Tags:    

Similar News