"கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி,அயோக்கியன் கருணாநிதி" : நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் கைது!

கருணாநிதி என்ன இறைத்தூதரா? அவரை பற்றி வாய் திறந்தாலே கைது செய்வீர்களா என்று ஸ்டாலினை விளாசித் தள்ளி உள்ளார் சீமான்!

Update: 2024-07-11 18:04 GMT

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பிரபல யூ-ட்யூபருமான சாட்டை துரைமுருகனை (Sattai Duraimurugan) காவல்துறையினர் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர்.இதுகுறித்து சென்னையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,"எதற்காக துரைமுருகனை இந்த அரசு கைது செய்திருக்கிறது. என்னைவிடவா அதிகமாக பேசிவிட்டார். என்னைச் சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்கள்.

அவர் பேசியது அவதூறு இல்லை, அது ஏற்கெனவே இருக்கும் பாடல்தான். அந்த பாட்டை பாடினால் கைது செய்வீர்கள் என்றால் தற்போது அதே பாட்டை பாடுகிறேன் என்னை கைதுசெய்யுங்கள்" எனக்கூறி அந்த பாடலை பாடியும் காண்பித்தார். மேலும், புள்ளப்பூச்சிகளைதான் நீங்கள் கைது செய்வீர்கள் என்றும் பாம்பு, தேள், நட்டுவாக்காலிகளை கைது செய்ய தைரியம் இருக்கிறதா?. புலி, சிங்கத்துடன் மோதுவீர்களா?முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்றார்.

தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் சீமான் தாக்கி பேசினார். அதில்,"அதிகாரத்திற்கு வந்துவிட்டபின் உங்கள் தந்தைக்கு புனிதர் பட்டம் கட்டிவிடுவீர்களா? செய்த துரோகம் மறந்துவிடுமா? தமிழர் இன அரசியல் வரலாற்றில், தீய ஆட்சியின் தொடக்கம், தீய அரசியலின் தொடக்கம் கருணாநிதியின் வருகைக்கு பின்னர்தான். யாராவது மறுக்க முடியுமா, பேரறிஞர் அண்ணா வரை இந்த அரசியல் வரலாறை எடுத்துப் பாருங்கள், எவ்வளவு கண்ணியம், நாகரீகம் இருந்தது.

கருணாநிதி வந்தபின்னர் பாருங்கள் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அநாகரீக அரசியல், அவதூறு பேச்சுகள், சாராயம் ஆகியவை வந்தன. முன்னாள் முதலமைச்சர் குறித்து பேசவே கூடாதா? முன்னாள் முதல்வர் இபிஎஸ் குறித்து முதல்வர் ஸ்டாலினும் தான் பேசியுளளார்.நீங்கள் பேசினால் கருத்துரிமை, நாங்கள் பேசினால் அது அவமரியாதையா? உங்கள் தந்தை என்ன இறைத்தூதரா, இயேசு நாதரா, கிருஷ்ண பரமாத்மாவா?" என திமுக அரசை சரமாரியாக விளாசித் தள்ளி உள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.


SOURCE :News

Tags:    

Similar News