"கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்கிறது எதற்காக?"- திமுக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதால் திமுக அரசை கடுமையாக கண்டித்து சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.

Update: 2024-07-12 17:33 GMT

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா என சீமான் கேள்வி எழுப்பினார் . நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவினர் பேசினால் கருத்துரிமை , எதிர்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் .இது தொடர்பாக சீமான் கூறியதாவது :-

"புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருகிறது? எங்கள் வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள் ?அதை மீறி எப்படி வரும்? கள்ளச்சாராயம் என்ன காற்றில் பறந்து வருகிறதா ?கடத்தி விற்கிறவர்களே நீங்கள் தான். கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காக பாய்கிறது, எதற்காக? சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள் .என்னைவிட அதிகமாக சாட்டை துரைமுருகன் பேசி விட்டாரா? என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி தவறாக பாடியதால் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள். இந்த பாட்டை பாடியதில் என்ன அவதூறு இருக்கிறது ?பாட்டை எழுதியவர், பாடியவர்களை எல்லாம் விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்து இருக்கிறீர்கள். நானும் அந்த பாடலைப் பாடுகிறேன். முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள். திமுக பேசினால் கருத்துரிமை ,எதிர்க்கட்சிகள் பேசினால் அதற்குப் பெயர் அவமதிப்பா?" என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.


SOURCE :News

Tags:    

Similar News