தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்.. தி.மு.கவிற்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்..
தமிழகத்தில் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருக்கிறார்களா?என்று பார்த்தால், உடனே அதில் பாஜகவை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று திமுகவினர் தமிழகத்தில் ஒரு மாயை ஏற்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவில் இருப்பவர்களின் குற்ற பின்னணிகள் குறித்து தி க்ரைம் முன்னேற்ற கழகம் என்ற டாக்குமெண்ட்டையும் வெளியிட்டுள்ளார். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுடனான சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறும் போது, "ஜனநாயகம் மெதுவாகத்தான் நகர செய்யும். தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டுகள் கழித்து ஜனநாயகம் அவர்களை மாற்றிவிடும். நான் காவல்துறையில் இருந்தபோது சரி, தவறு என்ற அடிப்படையில் மட்டுமே முடிவு எடுக்க முடிந்தது. அரசியல் கட்சித் தலைவரான பிறகு கடந்த மூன்றாண்டுகள் கடினமாகத்தான் இருந்தது.
சராசரி மனிதர்களை போல, எதற்கும் எதிர்வினை ஆற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். சில சமயங்களில் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்று யோசித்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் போன்றவை வேண்டும். கோவையில் வெற்றி தள்ளி போயுள்ளது. தோல்வி என நினைக்க வேண்டாம்" என்றார். இதை நாம் ஒரு ஆன்மீக பயணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு பணம் தராமல், நேரடியாகவே மக்களை சந்தித்து, அவர்களின் வாக்குகளை பெற்று இருக்கிறோம், இனியும் பெற வேண்டும். கோவையில் இப்போது கிடைத்திருக்கக்கூடிய 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நமக்கு மிக முக்கியமானது. இந்த வாக்குகள் நமக்கு பெருத்த நம்பிக்கையையே தந்து இருக்கிறது.