விதிமுறைகள் சட்டங்கள் பாமர மக்களுக்கு மட்டும் தானா? கேள்விகளை பறக்கவிடும் நெடிசன்கள்!

Update: 2024-08-03 16:37 GMT

தென்காசி மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள செல்வப் பெருந்தகை நெல்லையிலிருந்து நான்கு வழி சாலையில் தென்காசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்து உள்ள ராமச்சந்திர பட்டணம் என்னும் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்பாடு செய்த பைக் பேரணியில் கலந்து கொண்டார். இந்த பைக் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் கூட செல்வப் பெருந்தகை உட்பட ஹெல்மெட் அணியாமல் பேரணியை மேற்கொண்டனர். இதற்கு சமூக வலைதளத்தில் நெடிசன்கள் பல வகையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். 


அதாவது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் தலைவரே இது போன்று ஹெல்மெட் அணியாமல் செல்லலாமா? சட்டம் என்பது பாமர மக்களுக்கு மட்டும்தான், அரசியல் தலைவர்களுக்கும் பிரபலங்களுக்கும் கிடையாதா? என்று கேள்விகளை முன் வைத்தனர். இதனை அடுத்து நடிகரான பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பேட்டி கொடுத்துக்கொண்டே இருசக்கர வாகனத்தை பயணித்ததாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆனால் இந்த செய்தி வெளியான அதே சமயத்தில் பிரபல யூடியூப்பரான இர்பான் ஹெல்மெட் அணியாமல் ஒரு பிரம்மாண்ட பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகர் பிரசாந்தை விட சக்தி வாய்ந்தவரா இர்பான், இதுவே டி.டி.எஃப் வாசனாக இருந்தால் உடனடியாக கைது தான் நடந்திருக்கும் என்று நெடிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். முன்னதாக யூடியூப்பர் இர்பான் இந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் உதயநிதியை பேட்டி எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News