ஜெய்ஸ்ரீ ராம், அரோகரா என்று ஸ்டாலினே சொல்வார்.. அண்ணாமலை விமர்சனம்...

Update: 2024-08-09 03:02 GMT

அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோ என முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தென்னிந்திய மீனவர் பேரவை தலைவர் ஜெய பாலையன் தலைமையில், துணைத் தலைவர்கள் ராம், கஜபதி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் பாஜகவில் நேற்று முன்தினம் இணைந்தனர்.


அதன் பிறகு, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும் போது, தமிழக மீனவர்கள் பிரச்சினைதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வழங்கினோம். இந்திய வெளியுறவுத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்திப்பு விரைவில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், தமிழக மீனவ சங்கங்கள், இலங்கை மீனவ சங்கங்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை வேலைக்கு ஆகாது என திமுகவுக்கு தெரிந்துவிட்டது. எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பாஜகவின் நடவடிக்கை திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், பழனி முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அதனை நல்லபடியாக நடத்த வேண்டும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News