பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கத்தை கொண்டாடும் திராவிடர்கள்... சமூக வலைத்தளத்தில் வெடித்த விவாதம்!!

Update: 2024-08-09 14:41 GMT

பாரிசில் நடந்து வருகின்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் கோல்டன் பாய்யான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 89.45 மீட்டர் தூரத்தை அடைந்து வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார். அதோடு பாகிஸ்தான் விளையாட்டு வீரரான அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்து தங்கம் பெற்றார். இந்தியாவின் பெரும் நம்பிக்கையாளரான நீரஜ் வெள்ளி பதக்கத்தை பெற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தங்கம் பெறவில்லை என்பதற்கு தங்கள் வருத்தத்தையும் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். 


ஆனால் திமுக ஆதரவு ஐடிகள் நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றதை விட பாகிஸ்தான் வீரர் தங்கம் வென்றதில் மகிழ்ச்சி ஆகியிருக்கிறது என்று பதிவுகளை இட ஆரம்பித்தனர். அந்த வகையில் ஒரு திராவிட ஆதரவாளர், இந்திய துணை கண்டத்தின் பெருமை என்று குறிப்பிட்டு பாகிஸ்தான் வீரரான அர்ஷத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு காங்கிரசைச் சேர்ந்த இண்டி கூட்டணியின் ஆதரவாளர், சங்கிகள் நீரஜ் வெள்ளி பதக்கம் என்பதற்காக வருத்தப்பட இல்லை அர்ஷத் தங்கம் பெற்றதற்காகத்தான் வருத்தத்தில் இருக்கின்றனர் அப்படிப்பட்ட மத வெறியர்கள் என்று நீரஜ் வெள்ளி பதக்கம் பெற்றதற்காக பலரும் வருத்தம் தெரிவித்த இந்தியர்களை குறிப்பிடும் வகையில் சங்கிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் வெடித்தது. 


அதுமட்டுமின்றி நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றது திராவிடவாதிகளுக்கு பெருமிதம் இல்லையா என்று சுட்டிக் காட்டியும் பாகிஸ்தானின் வீரர் தங்கம் பெற்றதை பெருமையாக நீங்கள் கூறுகிறீர்கள் என்று ஒரு நெடிசன் பதிலடி கொடுத்திருந்தார். மற்றொருவர், பாகிஸ்தானின் வீர வெற்றியடைந்ததில் இந்திய எதிர்ப்பு கம்யூனிஸ்ட் மத வெறியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், அதனால் அவர்கள் பாகிஸ்தானியர்கள்! ஆனால் பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு பாகிஸ்தான் போரிலும் பயங்கரவாதத்திலும் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கொன்றது என்றும்; மற்றொரு நெடிசன், நீங்கள் தேசவிரோதி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் ஜிகாதி ஆதரவாளர் – ஒரே மூச்சிலாவது ஏன் நீரஜை வாழ்த்தக்கூடாது..ஓ, அவர் இந்து... நீங்கள் வெறும் தேசவிரோதி அல்ல, ஹிந்துபோபிக், இந்துக்கள், சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் வெறுப்பவர்கள் என்றும் சரியான பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News