பெருக்கெடுத்து ஓடும் சாராய விற்பனை.. நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்? வேலூர் இப்ராஹிம் கேள்வி..

Update: 2024-08-10 02:35 GMT

திமுக ஆட்சியில் மதுபான விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக சமீப காலங்களாக தமிழகத்தில் சாராய விற்பனை பெருக்கெடுத்து ஓடுகிறது என்று கூட பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இப்படி தமிழக மக்களை குடிமகன்களாக மாற்றி, அவர்களை தங்கள் என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்? என்பது கூட தெரியாத அளவிற்கு அடிமைப்படுத்து வைத்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலை அருகே மதிப்புமிக்க வயதான நபர் ஒருவர் குடித்துவிட்டு கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலை என்றால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அங்கு சென்று கொண்டே இருக்கும். இப்படி குடித்துவிட்டு கண் முன் தெரியாத அளவில் விழுந்து கிடந்தால் தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் கூட அவர்களுக்கு இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.


சென்னை திருச்சி நெடுஞ்சாலை மறைமலை நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மதிப்புமிக்க நபர் ஒருவர் குடித்துவிட்டு அதுவும் நெடுஞ்சாலை பாதையில் விழுந்து கிடக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை இதுகுறித்து பாஜகவின் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது, "சென்னை திருச்சி நெடுஞ்சாலை மறைமலை நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மதிப்புமிக்க நபர் ஒருவர் குடித்துவிட்டு அதுவும் நெடுஞ்சாலை பாதையில் விழுந்து கிடக்கிறார்.


அரசு நிச்சயம் இதற்கு விரைவில் ஒரு தீர்வை காண வேண்டும். ஏனென்றால் பகல் நேரங்களிலேயே பல்வேறு நபர்கள் தங்கள் என்ன செய்கிறோம்? என்று தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு, அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் விழுந்து கிடக்கிறார்கள். இது அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக போய் முடியும். எனவே தமிழகத்தில் ஆறாக ஓடும் சாராயங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News