கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கூட்டணி கட்சியை காப்பாற்ற முயற்சிக்கும் திமுக...!

Update: 2024-08-17 12:53 GMT

மருத்துவர்கள் இடையே தற்போது மிகப்பெரிய பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுவது கொல்கத்தாவில் ஒரு பிரபலமான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் ஒரு பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டது. கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நடந்த இந்த கொலைச் சம்பவத்தின் குற்றவாளியாக கொல்கத்தாவின் போக்குவரத்து காவல் தன்னார்வலராக உள்ள சஞ்சய் ராய்யை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த இடத்தில் குற்றச்சாட்டப்பட்டவரின் ப்ளூடூத் இயர் போன் உடைந்த நிலையில் கிடைத்ததாகவும், அது குற்றம் சாட்டப்பட்ட நபரின் மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தது மேலும் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த அந்த நபரின் காதில் இயர் போன் இருந்தது சிசிடிவி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. மேலும் 40 நிமிடங்கள் கழித்து அவர் மருத்துவமனை விட்டு வெளியேறும் போதும் அவரது காதில் இயர் போன் இல்லை. 

இந்த சம்பவத்தை அடுத்து ஆர்.ஜி.கர் மருத்துவமனை தலைவராக இருந்த சந்திப் கோர்ஸ் பதவி ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து இதனை எதிர்த்து மருத்துவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதனால் பல பகுதிகளில் மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர் அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பொழுது அங்கு புகுந்த கலவரக்காரர்கள் வன்முறையில் இறங்கி வாகனங்கள் மற்றும் பொது மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கொலை நடந்த செமினார் ஹாலும் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை கொல்கத்தா காவல்துறை மறுக்கிறது! இதற்கிடையிலே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குற்றம் வெளிவந்த பிறகு முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து தலா காவல் நிலையத்தில் பொறுப்பதிகாரி அபிஜித் மேண்டலுக்கு சிபிஐ சமன் அனுப்பியிருக்கிறது. மருத்துவர்கள் இந்த போராட்டத்தை மிகவும் தீவிரப்படுத்தி கொல்கத்தாவில் மட்டும் இன்றி அதை சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளிலும் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். ஒரு பயிற்சி மருத்துவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் இதே சம்பவம் மற்ற மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் இந்த விஷயத்தில் மம்தா பானர்ஜி இப்படித்தான் அலட்சியமாக இருந்திருப்பாரா? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதோடு மருத்துவர்களும் உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும் ஒரு மருத்துவருக்கே இங்கு பாதுகாப்பில்லை என்று அரசை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவை அனைத்தையும் சமாளிக்கும் விதமாக அந்த போராட்டத்திற்கே தலைமை தாங்கும் நடவடிக்கைகளிலும் மம்தா பானர்ஜி ஈடுபட்டு இருக்கிறார் என்பதும் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது. 

அதே சமயத்தில் சமூக நீதி மற்றும் பெண்ணியம் பேசும் திமுக கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை குறிப்பாக திமுக அமைச்சரான கனிமொழி தனது எக்ஸ் பதிவில் இந்த சம்பவம் தொடர்பாக ஒரே ஒரு பதிவை மட்டும் பதிவிட்டு அடுத்த வேளைக்கு பார்க்க சென்று விட்டார். இண்டி கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற அரசுகள் எந்த எதிர்ப்புகளையும் முன்வைக்காமல் கூட்டணி கட்சியை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

Tags:    

Similar News