நீங்கள் ஒரு அடி வைத்தால், மத்திய அரசு இரு அடி: கேள்வி கேட்டு வாங்கி கட்டி கொண்ட முதல்வர்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ கணக்கில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ், 2024-25 பட்ஜெட்டின்படி, புதிய பாதை திட்டங்களுக்கு ₹674.8 கோடியும், தெற்கு ரயில்வேயில் இரட்டிப்புத் திட்டங்களுக்கு ₹285.64 கோடியும் கணிசமாகக் குறைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இதனால் தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். போதுமான நிதியை உறுதிப்படுத்தவும், இந்த முக்கியமான முன்னேற்றங்களில் தாமதத்தைத் தடுக்கவும் உங்கள் உடனடித் தலையீட்டை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று ரயில்வே திட்டங்களில் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதாக குற்றம் சாடி இருந்தார்.
இதற்கு மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ், மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கீழ்கண்ட உண்மைகளை கொண்டு வர விரும்புகிறேன். என்.டி. ஏ அரசு, தமிழகத்தில் ரயில்வேயை மேம்படுத்துவதற்காக 6,362 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த தொகை யூ.பி.ஏ காலத்தில் செய்யப்பட்ட சராசரி ஒதுக்கீட்டை விட 7 மடங்கு அதிகம் (ஆண்டுக்கு ₹879 கோடி மட்டுமே). நமது அரசியலமைப்பு கட்டமைப்பில், நிலம் என்பது மாநிலப் பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். எங்கள் தரப்பில் இருந்து, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டிற்கு இரண்டு அடி எடுத்து வைப்போம் என்று உறுதியளிக்கிறோம் முதல்வரின் குற்றச்சாட்டிற்கு சரியான பதிலடி கொடுத்தார் மத்திய அமைச்சர்.
முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு பின்வருவனவற்றைக் கொண்டு வருகிறோம்: சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, பாலக்காடு, சேலம் மற்றும் திருவனந்தபுரம்- இவை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கோட்டங்கள்; ஒவ்வொரு பிரிவும் TN கீழ் வராது. தெற்கு ரயில்வேக்கான இரட்டிப்புப் பணிகளுக்கான பட்ஜெட் குறைக்கப்படலாம், ஆனால் இரட்டிப்புப் பணிகளுக்கான தமிழ்நாடு சார்ந்த திட்டங்களுக்கு திருத்தப்பட்ட திட்டத்தில் ₹1696 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டிப்புப் பணிகளுக்கான TN-சார்ந்த திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடு ₹1437 கோடி. 259 கோடி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் கீழ் TN-சார்ந்த திட்டங்களுக்காக கேஜ் மாற்றத்திற்கான பட்ஜெட் 65 கோடி நிகர அதிகரிப்பைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.