'பாவம் செய்தால் ஆண் குழந்தை, நல்லது செய்தால் பெண் குழந்தை'.. தி.மு.க அமைச்சரின் சர்ச்சை கருத்து.. நடவடிக்கை எடுப்பாரா அன்பில் மகேஷ்?

Update: 2024-09-10 14:34 GMT

தமிழகத்தில் சென்னை அசோக் நகர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் தினத்தன்று நடந்த ஒரு நிகழ்ச்சிகள் பிரபல ஆன்மீக பேச்சாளர் ஆன மகாவிஷ்ணு அவர்கள் ஆன்மீகம் சம்பந்த பேச்சின் விளைவாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசிய குற்றத்திற்காக திமுக மற்றும் ஆதரவு கட்சிகளின் வெறுப்புகளுக்கு கடந்த வாரங்களாக ஆளாக்கி இருக்கிறார். இந்நிலையில் இதே போன்று திமுக அமைச்சர்களின் ஒருவரான ஆர்.காந்தி அவர்கள் அரசு பள்ளி நிகழ்ச்சிகள் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாக்கி, ஏன் அமைச்சரின் அந்த பேச்சுக்கு திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? என்று நியாயமான தன்னுடைய கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.


குறிப்பாக தி.மு.க. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரசுப் பள்ளியில் நலத்திட்டங்களை வழங்கும்போது, ​​பாவங்கள், கர்மாக்கள் குறித்து பேசிய பழைய பேச்சு சமீபத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காரணமாக திமுகவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் மீது பல்வேறு இணையதள வாசிகளும் ட்ரோலிங் செய்ய வழி வகுத்து இருக்கிறது. பரம்பொருள் அறக்கட்டளையின் மகாவிஷ்ணு போன்ற ஆன்மீக பேச்சாளர்களிடம் எடுத்த நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், தன்னுடைய கட்சியை சேர்ந்த மற்ற அமைச்சரான ஆர்.காந்திக்கு எதிராக எடுப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


அந்த பழைய வீடியோவில் ராணிப்பேட்டை அரசுப் பள்ளியில் திமுக அமைச்சர் ஆர்.காந்தி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினார். இதை தொடர்ந்து, கூடியிருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் பேசும் போது, ​​சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். ஆர். காந்தி கூறும் போது "முந்தைய ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு மகன்கள் பிறக்கிறார்கள், அதே சமயம் கடந்த ஜென்மத்தில் நல்ல செயல்களைச் செய்தவர்களுக்கு மகள்கள் பிறக்கிறார்கள் என்று காந்தி பரிந்துரைத்தார். திமுக அமைச்சர் காந்தி, பெற்றோருக்கு அறிவுரை கூறும்போது, ​​“பெற்றோர்களே, தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதுமட்டுமில்லாம இன்னொரு விஷயத்தையும் அடிக்கடி சொல்வேன். பூர்வ ஜென்மத்தில் யாரேனும் பல பாவங்கள் செய்திருந்தால் ஆண் குழந்தைகளும், புண்ணியம் செய்திருந்தால் பெண் குழந்தைகளும் பிறக்கும். ஒரு பெண் தான் எங்கிருந்தாலும் அப்பா, அம்மாவைக் கவனித்துக் கொள்வாள்" என்று கூறியுள்ளார்.

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News