சீக்கியர்கள் குறித்து ராகுல் காந்தி கூறிய சர்ச்சை கருத்து.. ஆதரவு தெரிவித்த காலிஸ்தான் பிரிவினைவாதி..
இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த பாரளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அப்படி என்ன கருத்தை கூறினார் என்பது தொடர்பாக தற்போது பார்க்கலாம். அதாவது இந்தியாவில் சீக்கியர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் எல்லாம் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது தொடர்பாக அவர் உண்மை எதுவும் தெரியாமல், தவறான கருத்துக்களை பதிவு செய்து இருப்பதாக சீக்கியர்கள் கோபம் கொண்டு இருக்கிறார்கள்.
இது குறித்து குருபத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, “வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, காலிஸ்தான் அமைப்பின் பிரச்சாரத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை மற்றும் கடா அணிய அனுமதிக்கப்படுவார்களா? குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்களா?’ என ராகுல் கூறி இருந்தார்.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியது துணிச்சல் மிக்க உரை மட்டுமல்ல. அது கடந்த 1947 முதல் இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும், சீக்கியர்களுக்காக காலிஸ்தான் தேசத்தின் கோரிக்கைக்கான நோக்கத்தையும் உரக்கச் சொல்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: The Commune News