உதவி பெறும் கல்லூரிகளை மீட்பது எப்போது? சமூக நீதி பேசும் தி.மு.க அரசு என்ன செய்ய போகிறது?

Update: 2024-09-14 14:24 GMT

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளை மீட்பது எப்போது? என்று பேராசிரியரான அருண் கண்ணன் அவர்கள் கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது, "தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவதும், நிரப்பப்பட்ட இடங்களுக்கு ஊதியம் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்காமல் காலதாமதப் படுத்துவதாலும் தமிழக உயர் கல்வித் துறையில் கடந்த 20 ஆண்டுகளாக முளைத்துள்ள புதிய சிக்கல்கள். இது போன்ற சிக்கல்கள் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் ஏன் வருகிறது? என்பதற்கான பின்னணியை அரசு உதவிபெறும் கல்லூரிகள் உருவான வரலாற்றுடனும், அதில் ஆசிரியர் பணி நியமனங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களிலிருந்தும் புரிந்துகொள்ளலாம்.


சமூக நீதி பேசும் திமுக அரசு, இந்தப் பிரச் சிளையில் உரிய சுவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாள்களாகப் பணி நியமன ஆணை கிடைக்காமலும், ஆணை கிடைத்தும் உரிய ஊதியமின்றிப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடன பாகப் பணி நியமன ஆணையுடன் ஊதியத்தையும் வழங்குவது அவசியம். இத்தகைய குளறுபடிகளால் கல்வியின் தரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரி களுக்கு இணையாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் இடமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளே உள்ளன.

எனவே, இந்தச் சிக்கல்களைக் களைந்து இப்பணியிடங்களை நியாயமாக நிரப்புவது ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் எதிர் காலத்தோடு தொடர்புடையது என்பதை அரசு உணர வேண்டும். மேலும் சுயநிதிக் கல்லூரி பணிபுரியும் பேராசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புடன் அரசு உதவிபெறும் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படுவது இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவும். உயர் கல்வியை மேன்மைப்படுத்தும் மாற்றங் களைப் போராட்டங்களின் மூலமே சாத்தியப் படுத்த முடியும் என்பதைக் கடந்த காலங் களில் நடைபெற்ற ஆசிரியர்களின் போராட் டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனினும், அந்த அழுத்தம் ஆசிரியர்களுக்கு ஏற்படாத வகையில் அரசு கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Input & Image courtesy:The Hindu News

Tags:    

Similar News