செந்தில் பாலாஜிக்கு கிடைத்த ஜாமீன்: வெடிக்கும் விமர்சனங்கள்!

Update: 2024-09-26 13:07 GMT

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வருடங்களாக செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் புழல் சிறையிலே அடைக்கப்பட்டிருந்ததும் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீடித்துக் கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த செய்தி தற்பொழுது பரபரப்பாக வெளியாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

அந்த வகையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதை முன்பு தற்போதைய தமிழக முதல்வரே பேசியுள்ளார். இதனை செந்தில் பாலாஜி கட்சி மாறியதால் முதல்வர் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் முதல்வருக்கு ஞாபக மறதி வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மறதி தமிழகத்திற்கு நல்லதல்ல, செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவை பெற்று ஒரு அதிகாரம் படைத்த அமைச்சராக இருந்தார். சிறைக்குள் சென்ற பிறகும் கோவை மாநகராட்சியை யார் நேராக ஆக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்தார். இதனை அடுத்து, இதே நிலை செந்தில் பாலாஜி வெளியே வந்த பிறகும் நீடித்தால் அவரது செல்வாக்குகள் சாட்சிகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார். 

இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவர உள்ளதை குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், "உன் தியாகம் பெரிது, உறுதி அதினும் பெரிது" என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்.... எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ? சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார் தியாகி என்று கூறுவதற்கு? INDI கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல, காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர் 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடுமன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால், மத்திய அரசினால் அல்ல எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என்று தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளார். 

Source : ஜூனியர் விகடன் & தந்தி

Tags:    

Similar News