துரைமுருகனிடம் இருந்து கனிமவள துறையை முதல்வர் பறிக்க வேண்டும்:குற்றச்சாட்டை அடுக்கிய மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்!

தமிழகத்தில் தற்போது அதிகமான கனிமவள கொள்ளை நடந்து வருகிறது இதற்கு துறை அமைச்சர் துறைமுருகனும் அதிகாரிகளும் தான் காரணம் என மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் குற்றச்சாட்டு
அதாவது தமிழகத்தில் அரசு அனுமதி இன்றி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கிரஷர் இயந்திரங்கள் ஏங்கி வருகிறது இவற்றின் மூலம் அரைக்கப்படும் கனிமங்கள் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு டன் கணக்கில் நாள்தோறும் கனிமவளக் கொள்ளை நடக்கிறது தமிழகத்திலே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தான் அதிக அளவிளான குவாரிகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது அங்கிருக்கும் மலைகளும் அதிக அளவு உடைக்கப்படுகின்றன இதன் மூலம் கிடைக்கும் ஜல்லிக்கற்கள் எம் ஸ்டாண்ட் உள்ளிட்ட கனிமங்களை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் டன் அளவிற்கு லாரிகள் மூலம் கர்நாடகாவிற்கு கடத்தப்படுகிறது
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் இதே போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இரவும் பகலமாக கனிமங்களை கேரளாவிற்கு கடத்துகிறது, இது குறித்த புகாரை கலெக்டரிடம் தெரிவித்தும் அதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்ளாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது
இப்படி தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கனிமவள கொள்ளைக்கு துறை அமைச்சர் துறைமுகம் அதிகாரிகளும் தான் காரணம் 2020ல் இருந்து இது குறித்த தொடர் மனுவை கொடுத்த வருகிறோம் ஆனால் இதில் அமைச்சரும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளது
இது மட்டும் இன்றி கனிமவள பொருட்களை ஏற்றி சொல்லும் லாரி ஓட்டுனர்களையும் உரிமையாளர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கொள்ளையில் ஈடுபடுவோர் என வழக்குப்பதிவு செய்வது கண்டனத்திற்குரியது இதனால் 10 மாவட்டங்களில் கனிம வளக் கொள்கை குறித்து அரசருக்கு புகார் அளிக்க லோக் ஆயுக்தா அமைப்பை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும்
மேலும் தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கனிமவள துறையை அமைச்சர் துரைமுருகனிடமிருந்து பறிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்