தமிழக அரசியலில் சலசலப்பு: நடிகர் விஜய்யை சந்தித்த பிரசாந்த் கிஷோர்!

Update: 2025-02-11 17:01 GMT

நடிகர் விஜய் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் அரசியல் களத்தை பத்தி சென்னையில் பேசியுள்ளார். தமிழக அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தை நோக்கி நகர உள்ளது 200 தொகுதிகள் இலக்கு என்று திமுக தேர்தல் வேலையை தொடங்கியுள்ள நிலையில் வலுவான கூட்டணியை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று அதிமுக கூறி வருகிறது.

நடிகர் விஜயின் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகமும்2026 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் பங்கேற்க உள்ளது.அதற்கான வேலைகளை முன்பே தொடங்கி விட்ட நடிகர் விஜய் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அண்மையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்குள் தா.வெ.காவை கொண்டு வரவேண்டும் என்ற பேச்சு வார்த்தை நடந்த நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.


இந்த சந்திப்பை தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதம் அர்ஜுனா ஏற்பாடு செய்ததாகவும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்தும் இருதரப்பு பேசியதாகவும் கூட்டணி மற்றும் தேர்தல் செயல் திட்டம் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முக்கிய சந்திப்பின் போது தாவீக்கா அரசியல் வியூக வகுப்பாளர் ஜூன் ஆரோக்கிய சாமியும் கலந்து கொண்டுள்ளார். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக் கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர்,கடந்த ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News