மக்களை பிளவுப்படுத்தும் திராவிடமாடல்!தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர்!
காசி தமிழ் சங்கமம் 3.0 இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக ஆட்சியாளர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதன் மூலம் சமுதாயத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்
அதாவது அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது விதி இதனை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் ஆனால் தமிழக அரசு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது அவர்கள் ஏன் அரசு நிர்வாகத்தின் வரையறைக்கு உட்பட மறுக்கிறார்கள் இதில் அவர்களுக்கு அரசியல் உள்ளது சமூகத்திற்குள் பிளவு ஏற்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள் மேலும் மக்களை பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்