அரசின் பிடியில் இருந்து கோவில்கள் முற்றிலும் விடுவிக்கப்படும்: அண்ணாமலை உறுதி!

Update: 2025-02-20 15:07 GMT

திருப்பதியில் இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அமைந்து இருக்கும் கோவில்கள் மற்றும் ஆன்மீக தலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மாநாடு நடந்தது. இதில் 58 நாடுகளில் இருந்து ஹிந்து, சீக்கியம், பவுத்தம் மற்றும் ஜைன மதங்களை சேர்ந்த ஆன்மிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோவில் கலாசாரம், பண்பாடு, பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்கள் மற்றும் அரசுகளின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்த மாநாட்டு தமிழுக்கு பார் சங்கத் தலைவர் அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டார்.


இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். அரசின் பிடியில் இருந்து கோவில்கள் முற்றிலும் விடுவிக்கப்படும். கடந்த 250 ஆண்டு காலத்தில் நாம் என்ன இழந்தோமோ அவற்றை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் மீட்டெடுக்க வேண்டும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சந்தை மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி இருக்கும். இது சர்வ தேச மற்றும் நம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் மதிப்பை விட அதிகம். ஆனால், பல இந்து கோவில்களின் வருமானம், அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் சீரழிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கோவில்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News