அரசியல் நோக்கமும்,குறுகிய கண்ணோட்டமும் வேண்டாம்:மத்திய கல்வி அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம்!

Update: 2025-02-21 10:23 GMT

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் கடந்த வாரம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது இதனை அடுத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய கல்விக் கொள்கையின் அவசியத்தையும் முழு விளக்கத்தையும் கொடுத்திருந்தார் இருப்பினும் தமிழக ஆளும் கட்சியான திமுக மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் பாஜக இந்தியை திணிக்க முயல்கிறது என குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது 

இதற்கு நாங்கள் இந்தியை திணிக்கவில்லை மும்மொழி கொள்கை என்பது மூன்றாவது மொழியாக ஏதேனும் இந்திய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கை என பாஜக கூறுகிறது இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு சீர்திருத்தம் மட்டுமின்றி இந்தியாவின் கல்வி முறையில் உலக தரத்துக்கு உயர்த்த முற்படும் ஒரு மாற்று பார்வை 

2022ல் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தில் மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் மூலம் 13 இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டதை பிரதமர் வெளியிட்டார் இதனை அடுத்து தற்பொழுது மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் மூலம் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட 41 தமிழ் இலக்கிய படைப்புகளை உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் இணைந்து நான் வெளியிட்டுள்ளேன்

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான முக்கிய போட்டி தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.2024 செப்டம்பரில் பிரதமர் சிங்கப்பூர் சென்ற பொழுது இந்தியாவில் முதல் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என அறிவித்தார்

தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய மைய புள்ளியே ஒவ்வொரு மாணவரும் தங்கள் தாய்மொழியில் தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்வதுதான் 

புதிய கல்விக் கொள்கை 2020 முற்றிலும் மொழி சுதந்திரம் கொள்கையை நிலை நிறுத்துகிறது மாணவர்கள் தங்கள் விருப்பமொழியில் தொடர்ந்து கற்பதையும் உறுதி செய்கிறது 

அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்பதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு இந்த கல்விக் கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகளையும் வழங்கலையும் இழக்கின்றனர்

தேசிய கல்விக் கொள்கை மீதான குறுகிய பார்வையும் முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை தங்கள் அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக அச்சுறுத்தல்கள் ஆக மாற்றுவதும் மாநிலத்திற்கு பொருத்தமற்றது பாஜக அல்லாத பல மாநிலங்கள் அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் புதிய கல்விக் கொள்கையின் முற்போக்கான கொள்கையை செயல்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News