
தி.மு.கவினரை போல் இரட்டை வேடம் போடுபவர் போல் திருமாவளவன் இருக்க மாட்டார் என்றிருந்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் பொழுது, திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில் திருமாவளவனும் இணைந்துள்ளார் என்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை வேளச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் செகண்டரி ஸ்கூல் என்ற பள்ளியின் நிர்வாக குழு தலைவர் திருமாவளவன்.

அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு 3 மொழிகள் வேண்டாம் என்று அனைவருமே கூறி வருகின்றனர். ஆனால் வேண்டாம் என்று கூறுகின்ற அனைவரும் கட்டாயமாக ஏதோ ஒரு தனியார் பள்ளிகளுடன் ஒருவகையில் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை எதிர்ப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. அவர்களின் தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்துவிடும் என்பதை மனதில் கொண்டு வேண்டாம் என்கிறாரோ என்று கூட என்ன தோன்றுகிறது.

வருங்கால மாணவர்கள் 3 மொழியையும் கற்றுக் கொள்வதினால் அவர்களின் வாழ்க்கை திறன் மேம்படுவதை அவர்கள் தடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில் முன்மொழிகளில் பாடத்திட்டங்கள் உள்ளதை ஏற்றுக் கொள்பவர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர் என்று கேள்விக்கு பதில் கட்டாயம் அவர்கள் கூற வேண்டும் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.