கனிம வள கொள்ளையை வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு: அண்ணாமலை முன்வைத்த விஷயம்!

Update: 2025-03-16 17:12 GMT
கனிம வள கொள்ளையை வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு: அண்ணாமலை முன்வைத்த விஷயம்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தற்போது வரைகனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News