கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்-அண்ணாமலை!.

தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக் மூலம் ஆயிரம் ரூபாய் கோடி முறைகேடு நடந்ததற்கு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது ஆனால் பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் பாஜக தலைவர்களை போலீசார் வீட்டிலேயே கைது செய்தனர் அதுமட்டுமின்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் ஆகியோரை ஆர்ப்பாட்டத்திற்காக காரில் வந்து கொண்டிருந்த பொழுது அக்கரை சோதனைச் சாவடி அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரூபாய் 1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் A1 குற்றவாளி மு.க.ஸ்டாலின் கீழ் செயல்படும் திமுக காவல்துறை தமிழக பாஜகவின் இன்றைய டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று படாத பாடுபடுகிறது முதல்வர் அவர்களே உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்