தஞ்சாவூரில் கந்துவட்டியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி:தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

Update: 2025-03-19 16:41 GMT
தஞ்சாவூரில் கந்துவட்டியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி:தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ள பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்தி வடக்கு வாசல் பகுதியில் தனக்கு சொந்தமான மதுபான பாரை தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார் இந்த குத்தகைக்காக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 15,000 ஐ பத்மநாபன் கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்து வந்துள்ளார் 

இதனை அடுத்து கொரோனா காலகட்டத்தில் மதுபான பார்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் பேசியபடி பத்மநாபனால் குத்தகை பணத்தை கொடுக்க முடியவில்லை பத்மநாதன் கொடுக்காத குத்தகை பணத்தை கணக்கில் வைத்துக் கொண்டே வந்த கிருஷ்ணமூர்த்தி அதற்கு வட்டி போட்டு மொத்தமாக 14.50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வந்துள்ளார்

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பத்மநாபன் கொடுக்க வேண்டிய பணத்திற்கு பதிலாக அவரது வீட்டை எழுதி தர வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி மிரட்டியுள்ளார் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அந்த தகராறு பத்மநாபனை கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது காயம் அடைந்த பத்மநாபன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் 

இதனால் பத்மநாபன் தரப்பில் கிருஷ்ணமூர்த்தி கந்துவட்டி கேட்டு மிரட்டி கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்ததை அடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து இந்த விவகாரத்தில் அவரின் சகோதரர் சின்ன பப்பு என்கிற முத்துக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்கள் தலைமறைவாக இருப்பதால் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

Similar News