லோக்சபாவிற்கு எழுத்துக்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களுடன் வந்த திமுக எம்பிகள்,கண்டித்த ஓம் பிர்லா!

பல எதிர்க்கட்சி எம்பிகள் லோக்சபாவிற்கு மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து வந்திருந்தனர் அவர்களை சபாநாயகர் ஓம் பிரிலா கண்டித்ததோடு அவையை ஒழுங்காக நடத்த வேண்டும் என்றால் சரியான ஆடையில் வருமாறு கேட்டுக் கொண்டார்
அதாவது திமுகவினர் நியாயமான எல்லை நிர்ணயம் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-ஷர்ட்களை அணிந்து லோக்சபாவிற்கு வந்தனர் இதற்கு அவையில் சில எம்பிகள் அவையின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பதில்லை டி-ஷர்ட் அணிவது பார்லிமென்ட் ஒழுக்கத்தை மீறுவதாகும்
பார்லிமென்ட்டின் விதி 346 ஐ படித்து சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் டிஷர்ட்களை நீங்கள் அணிந்து லோக்சபாவிற்குள் வந்தால் அவை செயல்படாது நீங்கள் டி-ஷர்ட்களை மாற்றி வந்தால் மட்டுமே அவை செயல்படும் கோபத்துடன் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்