ஊழலை மறைக்க நீங்கள் மொழியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்:நாடாளுமன்றத்தில் அமித்ஷா!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுகவை சாடியுள்ளார்
அதாவது உள்துறை அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பயங்கரவாதம் ஜம்மு காஷ்மீர் நக்சலிசம் மொழி பிரச்சனை உள்ளிட்டவை பற்றி பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டு வந்தார் கடந்த காலங்களில் பயங்கரவாதத்தில் தாக்குதல் நடந்தாலும் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனாலே பயங்கரவாதம் நீடித்துக் கொண்டே சென்றது ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பத்து நாட்களுக்குள் நாம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினோம்
21 மார்ச் 2026க்குள் நாட்டில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள் இந்த பிரச்சனைக்காக போராடி துன்பங்களை தாங்கியவர்களுக்கு மீண்டும் நான் எனது மரியாதையை செலுத்துகிறேன் என கூறினார் மேலும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர்களின் தாய் மொழிகளில் மட்டுமே கடிதங்களை பரிமாறிக் கொள்வேன்
ஆனால் சிலர் இங்கு தங்கள் ஊழலை மறைக்க மொழி பிரச்சனையை எழுப்புகிறார்கள் மொழிக்காக நாங்கள் என்றும் பாடுபட்டுள்ளோம் இந்திய மொழிகளில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்துள்ளோம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழிலே மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம் ஊழலை மறைக்க நீங்கள் மொழியை பயன்படுத்துகிறீர்கள் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்