பத்து நாட்கள் தான்! திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் காலக்கெடு வைத்த உச்சநீதிமன்றம்!

Update: 2025-03-24 16:23 GMT
பத்து நாட்கள் தான்! திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் காலக்கெடு வைத்த உச்சநீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்று சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வந்தார் சிறையில் இருக்கும் பொழுதும் அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி பிறகு தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் 

இதனை அடுத்து சமீபத்தில் ஜாமினில் வெளியேறிய அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது திமுக அரசு ஆனால் அவரது ஜாமினி ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அடுத்து அந்த வழக்கு மீதான விசாரணை இன்று 24 மார்ச் 2024 உச்சநீதிமன்றத்தின் வந்தது இந்த வழக்கு விசாரணையின் பொழுது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும் சாட்சிகள் முறையாக விசாரிக்க முடியாது என்றும் தனது வாதங்களை முன் வைத்தது

இதற்கு முன்பாகவே நடந்த விசாரணையின் பொழுது அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி ஏன் நீடிக்கிறார் என உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி விடும் கேள்வி எழுப்பியது மேலும் மூன்று முறை வழக்கு விசாரணைக்கு வந்த பிறகும் நோட்டீசை காரணம் காட்டி பதில் மனு தாக்குதல் செய்யாமல் இருப்பதும் ஏன் ஜாமினை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வழக்கு 10 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் 

இந்த நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் ஜாமினி ரத்து செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறியுள்ளது இதற்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ஒவ்வொரு அமர்விலும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது பத்து நாட்களுக்குள் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இதற்குமேல் கால அவகாசம் வழங்கப்படாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 

Tags:    

Similar News