ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு?அண்ணாமலை கேள்வி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர்கள் விடுதியில் தரமற்ற உணவு கொடுக்கப்படுவதால் உணவுகள் வீணாகிறது வீணாகும் உணவுகள் ஒரு ட்ரம் ஐந்து ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதால் மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும் இந்த வீணாகும் உணவு கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது
சென்னையில்,ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு,அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது ஆனால் இந்த உணவு சுவையற்றதாக,தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும் மேலும்,குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால்,மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன விடுதி ஊழியர்கள் இந்த உணவை,அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர் சென்னை மட்டுமல்ல,தமிழகம் முழுவதுமே ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 - 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ,மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர் மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக ரூபாய் 142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி சராசரியாக ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூபாய் 39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது ஆனால் உணவுப் படி ஒருவருக்கு ரூபாய் 50 வீதம் மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்.உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ.50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ39 மட்டுமே இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்