தொடரும் வகுப்பறை இல்லா அரசு பள்ளிகள்:தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியிலே இந்த நிலைமை!

Update: 2025-04-07 15:11 GMT
தொடரும் வகுப்பறை இல்லா அரசு பள்ளிகள்:தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியிலே இந்த நிலைமை!

தமிழகத்தின் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் படிக்கும் சம்பவம் அதிகமாகவே நடந்து வருகிறது இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் அவர்கள் சொந்த தொகுதியிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது இது குறித்து பாஜக மாநிலத தலைவர் அண்ணாமலை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களின் சொந்தத் தொகுதியான,திருவிடைமருதூர் அம்மன்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியின் நிலை இதுதான் கட்டிடங்கள் இல்லாமல்,கடந்த நான்கு ஆண்டுகளாக,மரத்தடியிலும், ஷெட்டுகளிலும், ஒரே கட்டிடத்திலும் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன


பள்ளிக் கல்வி,உயர்கல்வி என கல்வித் துறைக்கான இரண்டு அமைச்சர்களின் சொந்தத் தொகுதியில் உள்ள பள்ளிகளிலேயே கட்டிடங்கள் இல்லை.திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வி எத்தனை அவல நிலையில் இருக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு சான்று


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,5,000 பள்ளிகள் கட்டினோம்,6,000 பள்ளிகள் கட்டினோம் என்று கதை விட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே. மீண்டும் மீண்டும் கேட்கிறோம். எந்தெந்த மாவட்டங்களில், எவ்வளவு நிதியில்,எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற வெள்ளை அறிக்கை வெளியிட என்ன பயம் உங்களுக்கு? என தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News