அமித் ஷா பதவி விலக வேண்டுமா?அப்போ கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமா?கேள்வியால் திணறிய திருமாவளவன்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி இந்து சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று சமீபத்தில் கோரிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் நடந்த கள்ளக்குறிச்சி நிகழ்வை குறிப்பிட்டு தமிழக முதல்வரிடம் இதே போன்ற கோரிக்கையை ஏன் வைக்கவில்லை என்று கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு திருமாவளவனிடம் பதில் இல்லை
திருச்சியில் திராவிடர் கழக நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில் நிருபர் ஒருவர் உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது நீங்கள் அமித் ஷாவின் ராஜினாமாவைக் கோரினீர்கள் ஆனால் 40-50க்கும் மேற்பட்டோர் இந்த துயரச் சம்பவத்தில் இறந்துள்ளனர். முதலமைச்சரை பதவி விலகச் சொல்லாதது ஏன் என்று கேட்டார்
அதற்கு திருமாவளவன் அதிர்ச்சியடைந்து தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று புன்னகைத்து, அந்தக் கேள்வியை நிராகரித்து அது ஒரு அற்பமான குற்றச்சாட்டு அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அந்த சம்பவத்திற்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு பிறகு மழுப்பலாக சில கருத்துக்களை கூறிவிட்டு சென்றுவிட்டார்