மனதில் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் தி.மு.க அரசு: பா.ஜ.க மாநில தலைவர் குற்றச்சாட்டு!

Update: 2025-04-27 15:23 GMT

பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு அனுமதி தராமல் மக்களை அது எங்கும் அழைக்களிக்க வைக்கிறார்கள் தி.மு.கவினர். இது போன்ற திமுக அரசின் அதிகாரப் போக்கு நியாயமற்றது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், தமிழக பா.ஜ., சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க அரசின் அதிகாரப் போக்கு நியாயமல்ல.


திமுக-வினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும் போலீஸ் பந்தோபஸ்தும் கொடுக்கும் திமுக அரசு, பிரதமர் மோடி நாட்டு மக்களோடு கலந்துரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு இத்தனைக் கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல" என கூறி உள்ளார்.

Tags:    

Similar News