தமிழக அமைச்சரவை மாற்றம்: மாற்றத்திற்கான முக்கிய காரணம் இதுதான்!

Update: 2025-04-28 16:04 GMT

திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஐந்தாவது முறையாக மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


அந்த வகையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் அமைச்சர் பதவியை இழந்துள்ள செந்தில் பாலாஜி, மேலும் பெண்கள் தொடர்பான சர்ச்சையான கருத்தால் கட்சி பதவியை மட்டுமில்லாமல் அமைச்சர் பொறுப்பையும் பறி கொடுத்த பொன்முடி. ஆகிய இருவரும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்ட பிறகு புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மனோதங்கராஜ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் இன்று மாலை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News