ஈரோடு இரட்டைக் கொலை சம்பவம்: அண்ணாமலை நேரில் சென்று ஆறுதல்!

Update: 2025-05-05 17:56 GMT

தமிழகத்தையே உலுக்கிய ஈரோடு இரட்டைக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தம்பதியின் உறவினர்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம். இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் இருந்த போது, மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர்.


வீட்டினுள் இருந்த 12 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள், இருவரும் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர். தம்பதி கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறி வைத்து, தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்று தி.மு.க., அரசைத் தொடர்ந்து தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

Tags:    

Similar News