பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அது இந்தியக் கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்:ராஜ்நாத் சிங்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும் மேலும் பாகிஸ்தான் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்திய கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்
கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடையே அவர் உரையாற்றினார் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய கடற்படையின் அமைதியான சேவையைப் பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தான் கடற்படை வெளியேறாமல் இருந்ததை உறுதி செய்ததாக கூறினார் பாகிஸ்தான் தீய எண்ணத்துடன் செயல்பட முயன்றால் இந்திய கடற்படை மூலம் மத்திய அரசு பதில் அளிக்கும் என்று குறிப்பிட்டார்
பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளையும் இந்தியா முழு சுதந்திரத்துடன் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார் பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை இன்று உலகம் ஒப்புக்கொள்வதாகவும் பாகிஸ்தான் தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்