தமிழில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரும் பெரும் முயற்சி: பாராட்டிய தமிழக பா.ஜ.க மாநில தலைவர்!
தமிழை தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் மற்றும் செம்மைப்படுத்தும் வகையில் தமிழ் ஏ.ஐ என்னும் பெயரில் தமிழில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும் முயற்சியில் பாஜகவை சேர்ந்த மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்களின் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்து இருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்த அவர் கூறும் பொழுது, நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் தமிழ் AI எனும் பெயரில் தமிழில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரும் பெரும் முயற்சியை நமது பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமிதமும் அளிக்கிறது.
உலகத்திலேயே முதன்முதலில் ஒரு மொழிக்காக செயற்கை நுண்ணறிவு உருவாக்கப் பட்டுள்ளதோடு, முழுவதும் நமது தாய்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் சாதனை. இதுபோன்ற முன்னோடியான முயற்சியை எடுத்துள்ள சகோதரர் அஷ்வத்தாமன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.