என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது,அதை கேள்வி கேட்க நீங்கள் யார்?முருகன் மாநாட்டில் பவன் கல்யாண்!
மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாடு அம்மா திடலில் கோலாகலமாக நடந்து வருகிறது அந்நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்
அதாவது தென் தமிழகத்தில் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர் முருகனின் அவதாரமாக திகழ்கிறார் என்னை வளர்த்தது துணிச்சல் கொடுத்தது முருகன் உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன் என தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் இந்த மாநாட்டை ஏன் நடத்த வேண்டும் மத்திய பிரதேசம் குஜராத்தில் நடத்த வேண்டியதுதானே என கூறுகிறார்கள் ஆனால் இதன் மூலம் பிரிவினை செய்ய பார்க்கிறார்கள் அதுமட்டுமின்றி அங்கு சிலர் எனது கடவுள் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை கேலி செய்கின்றனர் என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது அதை கேள்வி கேட்க நீங்கள் யார்?எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு தாங்காது என கூறியுள்ளார் பவன் கல்யாண்