முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் செய்த செயலும் திமுக நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வும்!
ஜூன் 22 மாலையில் மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பல்லாயிரம் முருக பக்தர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றது
இதனால் ஆளும் கட்சி தரப்பு பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது இந்த நிலையில் மாநாடு முடிந்த பிறகு முருக பக்தர்கள் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தாங்களாகவே அடுக்கி வைத்துவிட்டு தீபத்தை தொட்டு கும்பிட்டு சென்றுள்ளனர் மேலும் மாநாடு நடந்த அடையாளமே தெரியாதபடி அன்று ஒரே நாளிலேயே அம்மா திடல் சுத்தமாக காணப்பட்டது இதற்கு இது முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம் இதுவே திமுகவின் மாநாடாக இருந்தால் நிலைமையே வேற என சமூக வலைதளங்களில் நெடிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
ஏனென்றால் கடந்த ஜூன் மாதத்தில் திருப்பூரில் நடைபெற்ற எம் எல் ஏ செல்வராஜ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கரும்பு வாழைத்தார்களை போட்டி போட்டு அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றனர் அதுமட்டுமின்றி கடந்த வருடம் விருதுநகரில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பிறகு விலா மற்றும் மேடையின் நுழைவாயில் கட்டப்பட்டிருந்த வாழைத்தார் களை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்
மற்றொன்று எடுத்துக்காட்டாக திமுகவின் பொதுக்கூட்டம் நடந்து முடிந்த முடிவு ஆளுக்கொரு நாற்காலியை அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எடுத்துக் கொண்டே நடைபெற்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் இன்றும் உலா வந்து கொண்டு தான் உள்ளது இதே போன்று தான் முருக பக்தர்கள் மாநாட்டிலும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆனால் அங்கு நடந்த கதையே வேறு என தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் வலம் வருகிறது