மாணவர் விடுதிகளில் உள்ள அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாமல் விளம்பரத்திற்கு கோடிகோடியாக இறைக்கும் திராவிட மாடல்!
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதற்கு தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023-2024 விளம்பரச் செலவு ரூ.1.65 கோடி 2024-25 ஆண்டு விளம்பரச் செலவு ரூ.11.48 கோடி இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர,இதனால் மாணவ மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என கூறியுள்ளார்
அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி,சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி,பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன மாணவர் விடுதிகளில் தரமான உணவு,சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக,ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு தெரிவித்திருந்தது இதன்படி சராசரியாக ஒரு மாணவருக்கு,ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது ஆனால்,ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம் மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்
ஒரு நாளைக்கு ரூ.50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில் திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை மாதம் ரூ.1,500ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும்,முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் ஆதிதிராவிடர் பள்ளிகள் மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு