'அடுத்த வாரம் எங்க மாமா வராரு அவரு 80 ரூபாய்க்கு வேலை பார்ப்பாரு' - திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த கமலஹாசன்

சமீபத்தில் பரிதாபங்கள் youtube சேனலில் வெளியான 'அடுத்த வாரம் எங்க மாமா வராரு அவரு 80 ரூபாய்க்கு வேலை பார்ப்பாரு' என்கிற வீடியோவில் வரும் வசனம் சமீபத்தில்

Update: 2023-01-27 01:47 GMT

சமீபத்தில் பரிதாபங்கள் youtube சேனலில் வெளியான 'அடுத்த வாரம் எங்க மாமா வராரு அவரு 80 ரூபாய்க்கு வேலை பார்ப்பாரு' என்கிற வீடியோவில் வரும் வசனம் சமீபத்தில் இணையங்களில் மிகப் பிரபலம், அதே போன்று திமுக கூட்டணிக்கு கமலஹாசன் கடந்த தேர்தலில் எல்லாம் எதிர்த்து அரசியல் செய்துவிட்டு இப்பொழுது விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கிய நன்றிக்கடனாக ஆதரவு கொடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டதுங்க, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சுங்க.

இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே பார்க்கப்பட்டது, ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு திமுக கூட்டணியில் இருந்த தொகுதி இன்னொரு பக்கம் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் யார் வேட்பாளர் அறிவிக்குறதுன்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் பாஜக க்கு இது வரபோற நாடாளுமன்ற தேர்தலோட பலப்பரிட்சை இப்படி மூன்று மிகப்பெரிய கட்சிகளுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்பவே முக்கியமா பார்க்கப்பட்ட நிலையில இந்த தொகுதியில போட்டியிடும் வேட்பாளர் கண்டிப்பாக கவனம் குவிக்கிற வேட்பாளராக இருப்பாங்க என்று எதிர்பார்ப்பு நிலவி வந்துச்சு.

இப்படி தமிழக அரசியல அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு நகர்த்தி கொண்டு போற மைப்புள்ளியா ஈரோடு இடைத்தேர்தல் மாறியிருக்கிற நேரத்துல யாருப்பா ஈரோடு தொகுதியுடைய வேட்பாளரா வருவாங்கன்னு சொல்லி எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு! இந்த நேரத்துலதான் இறந்து போன திருமகன் ஈவேரா ஓட தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன காங்கிரஸ் ஓட தலைமை வேட்பாளரா அறிவிச்சிருக்கு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரிப்பது என முடிவை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் எடுத்துள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுருக்கு. இந்த நிலையில் கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனை ஏற்று ஆதரவை வழங்கிய மக்கள் நீதி மையத்திற்கு எனது வாழ்த்துக்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையும் இறையாண்மை நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத வகுப்புகள் வீழ்த்த வேண்டும் என்பதில் கமலஹாசன் அவர்களுக்கு இருக்கிற தீவிர தன்மையை பாராட்டுகிறேன் வரவேற்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினும் கமலஹாசன் அவர்களுக்கு நன்றி இந்த தேர்தல் எங்களுக்கு ஆதரவு அளித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை எனவும் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் கமலஹாசன் தீவிரமாக திமுகவை எதிர்த்து வாக்கு சேகரித்தார் என்பதையும் வாக்காளர்கள் யாரும் மறக்கலங்க, அதே சமயம் போன தேர்தலுக்கு கமலுக்கு குடும்ப கட்சியா தெரிஞ்ச திமுக கூட்டணி இப்ப மட்டும் முற்போக்கு கூட்டணியா தெரியுது!


தேர்தலுக்குப் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த கமலஹாசன் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. கமலின் அடுத்த இரண்டு படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News