நீலகிரி தி.மு.க உட்கட்சித் தேர்தலில் களேபரம் - அடிதடியில் முடிந்த உட்கட்சி மோதல்

Update: 2022-04-26 02:12 GMT

தி.மு.க. அலுவலகத்தில் இருந்து திடீரென்று கூச்சல் கேட்டுள்ளது. இதனை கேட்ட மார்க்கெட் வியாபாரிகள் அங்கு சென்று கைகலப்பைத் தடுதுதுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகம் முழுவதும் தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சிப் பதவிகளுக்கு விருப்பம் இருப்பவர்கள் வேட்புமனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் நகரத்தில் கிளைக்கழகத்துக்கு உட்கட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது.

இதனால் தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமானோர்கள் கூடினர். இப்பகுதி முழுவதும் கூச்சல், குழப்பமாக இருந்தது. அப்போது திடீரென்று கட்சி நிர்வாகிகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவத்தால் வெளியில் இருக்கும் மார்க்கெட் வியாபாரிகளுக்கு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் ஓடிச்சென்று சண்டை போட்டுக்கொண்டவர்களிடம் சமாதானம் பேசி தடுத்துள்ளனர். ஆளும் கட்சியான தி.மு.க.வில் இது போன்ற சண்டைகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது வாடிக்கையாகவே உள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News