பஞ்சாபில் ‘நோ’ கூட்டணி.. எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி.. பாஜக அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாபில் ‘நோ’ கூட்டணி.. எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி.. பாஜக அதிரடி அறிவிப்பு..!

Update: 2020-11-18 14:28 GMT

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளமும், பா.ஜ.க.வும் நீண்ட காலமாக கூட்டணி வைத்தே சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வந்தது.

சிரோன்மணி அகாலி தளம் மாநிலத்தில் வலுவான கட்சி என்பதால் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் 94 தொகுதிகளிலும், பா.ஜ.க. 23 தொகுதிகளிலும் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தது.

சிரோன்மணி அகாலி தளம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை சிரோன்மணி அகாலி தளம் கடுமையாக எதிர்த்தது.

மேலும் அந்த கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அந்த கட்சி வெளியேறியது. அதேசமயம் பாஜக கூலாக எடுத்துக்கொண்டது.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது: 2022ம் ஆண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 117 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்.

பஞ்சாபில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட பாஜக ஒரு அமைப்பை ஒரு போர்க்காலத்தில் பலப்படுதுகிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை ஆன்லைனில் 10 மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.

Similar News