சசிகலாவால் எந்த மாற்றமும் நிகழாது: பா.ஜ.க. துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.!
சசிகலாவால் எந்த மாற்றமும் நிகழாது: பா.ஜ.க. துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.!;
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவரது வருகை தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பெயர் சசிகலா. அவர் மீண்டும் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் அவரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், சசிகலா வருகையால் தமிழகத்தில எந்த மாற்றமும் நிகழாது. தேர்தல் சமயத்தில் புதிய நபரோ அல்லது புதிய கட்சியோ ஆரம்பித்தால் அது எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மேலும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அவர்கள் வருகை குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.