பாஜகவிற்கு பின்னடைவே இல்லை.. விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி.!

பாஜகவிற்கு பின்னடைவே இல்லை.. விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி.!

Update: 2020-11-20 14:08 GMT

பாஜகவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது என்றும், முன்னேற்றம் மட்டுமே இருப்பதாக அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இன்று முதன் முறையாக கோவை வந்த வானதி சீனிவாசனுக்கு, விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரையை, மாநில தலைவர் எல்.முருகன் நடத்தி வருகிறார். மேலும், இந்துக்களை கொச்சை படுத்துபவர்களை அம்பலப்படுத்தவே இந்த யாத்திரை தொடங்கி உள்ளதாக கூறினார். 


சட்டப்படி நடைபெறும் யாத்திரையை தடுத்தால் மக்களிடையே எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என தான் தெரிவித்ததை, அதிமுகவினர் இதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

மேலும், அதிமுகவுடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த வானதி சீனிவாசன், கூட்டணியின் தலைமையாக அதிமுக உள்ளது. கூட்டணி தொகுதி குறித்து கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும் என தெரிவித்தவர், பா.ஜ.கவிற்கு இனிமேல் தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது என்றும் முன்னேற்றம் மட்டுமே உண்டு எனக்கூறினார்.

Similar News