சிறப்பு சலுகை இல்லை.. சசிகலாவுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சர்.!

சிறப்பு சலுகை இல்லை.. சசிகலாவுக்கு செக் வைத்த உள்துறை அமைச்சர்.!

Update: 2020-11-20 13:07 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை கிடையாது என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். 


சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி கடந்த 2017 ஆம் வருடம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


இதனையடுத்து அவர் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவரின் 4 ஆண்டு சிறை தண்டனை தற்போது முடிவடையும் நிலையில், சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாவார் என்று சிறைத்துறை நிர்வாகம் கூறியிருந்தது.


ஆனால் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கர்நாடக சிறைத்துறையின் விதிகளின் படி, நன்னடத்தை காரணமாக சசிகலாவுக்கு 120 நாட்கள் சிறை பிடிப்பு சலுகை இருப்பதால் அவர் எந்நேரத்திலும் விடுதலையாகலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றார்.


தற்போது அமைச்சரின் பேட்டியால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. எப்படியும் விடுதலையாவார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கலாம் என பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News