யாருக்கும் ஆதரவு இல்லை.. ரஜினியிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை.!
யாருக்கும் ஆதரவு இல்லை.. ரஜினியிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என ரஜினி மன்றத்தின் நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் கட்சியை தொடங்கப்போவது இல்லை எனறு திட்டவட்டமாக அறிவித்தார்.
இதனிடையே ரஜினியுடன் இருந்த தமிழருவி மணியன் யாருக்காவது ஆதரவு அளிப்பார் அல்லது மீண்டும் கட்சியை தொடங்க வாய்ப்புள்ளது எனவும் பேட்டியளித்து வந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு 100 சதவீதம் வரமாட்டார் எனவும், தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்கவும் மாட்டார் எனக் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் தொலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். அந்த தகவலில், லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு உண்மையில்லை எனவும், அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கும் பட்சத்தில் அவருக்கும் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் சுதாகர் கூறியுள்ளார்.
தற்போது அரசியல் பரபரப்புக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். யாருக்கும் ஆதரவு இல்லை என்பதால் அவரை எந்த கட்சியும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.