கழிப்பறை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம்.!

கழிப்பறை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம்.!

Update: 2021-02-16 18:35 GMT

வீட்டில் கழிப்பறை இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வருகின்ற 21ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும். அதற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும் என்பது அதன் விதியாகும்.

இந்நிலையில், ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் காங்கிரஸ் சார்பில் கிரினா படேல் 47, என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தங்க நகைகள், சொகுசு கார் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று பாஜகவினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து கிரினா படேல் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து கிரினா படேலின் வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்தது. வீட்டில் கழிவறை இல்லாததால் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிவறை உயயோகிக்கிறார்களா என்ற சட்டம் குஜராத்தில் உள்ளதை போன்று மற்ற மாநிலங்களிலும் விரிவு படுத்தினால் நாடு நலம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 

Similar News